Header Ads

விரைவில் ஆரப்பிக்கப்படவுள்ளது பேஸ்புக் தொலைக்காட்சி!


 விரைவில் ஆரப்பிக்கப்படவுள்ளது பேஸ்புக்
 தொலைக்காட்சி!




சர்வதேச தொலைகாட்சிகளுக்கு போட்டியாக விரைவில் தொலைகாட்சியை ஆரம்பிக்க பேஸ்புக் நிறுவனம் தீர்மானித்துள்ளது.


2004 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பேஸ்புக் தற்போது சுமார் 200 கோடி பயனாளர்களை கவர்ந்துள்ளது.

பயனாளர்களை தன்வசப்படுத்த பேஸ்புக் நிறுவனம் ஒவ்வொரு நாளும் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய வசதிகளை அப்டேட் செய்து வருகிறது.

வயது வித்தியாசமின்றி அனைவரையும் தன் வசம் ஈர்த்துள்ள பேஸ்புக்கை பயன்படுத்துபவர்கள் இந்தியாவில்தான் மிக அதிகமாக இருப்பதாக சமீபத்திய புள்ளிவிபரம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பேஸ்புக் தொலைக்காட்சியை இந்த மாதம் ஆரம்பிக்கவுள்ளது, வீடியோக்கள், விளம்பரங்கள் என பல நிகழ்வுகளை பேஸ்புக் மூலம் வெளியிட்டு தொலைகாட்சிகளுக்கு மறைமுக போட்டியாக இருந்து வந்த பேஸ்புக் தற்போது தொலைகாட்சிகளுக்கு நேரடி போட்டியாக மாறவுள்ளது.

பேஸ்புக் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகப் போகும் நிகழ்ச்சிகள் குறித்த அட்டவணைகள் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பேஸ்புக் தொலைக்காட்சி இந்த மாதம் தொடங்கப்படவுள்ள நிலையில், இதுவரை இளைஞர்களை கவர்ந்த பேஸ்புக் தளம் தொலைக்காட்சியாக மின்னுமா என்பதுஇந்த மாத இறுதிக்குள் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments